தங்கத்துக்கான இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதமாகக்
காணப்பட்ட தங்கத்துக்கான இறக்குமதி தீர்வை 7.5 சதவீதமாக
குறைக்கப்பட்டுள்ளது என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது வரவு - செலவுத் திட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி தீர்வை மீது விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத மேலதிக அறவீடு அகற்றப்படும் என அறிவித்தார்.
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து தங்கம் மீதான 10 சதவீத இறக்குமதி தீர்வை மீது 100 சதவீத மேலதிக அறவீடு விதிக்கப்பட்டது.

0 Comments