புயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்களுடன் ஆவியாக வாழ்ந்து
வருவதாக அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வழங்கிய
தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20 ஆம்
திகதி புயலில் சிக்கி நிக்கொலஸ் மெக்காபே என்ற சிறுவன் உயிரிழந்தான்.
அச்சிறுவன் கல்விகற்ற பாடசாலையின் கட்டிடத்தை புயல் தாக்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்பின்னர் நிக்கொலஸின் மைத்துனியான சிறுமியொருவர் எடுத்துக்கொண்ட
புகைப்படத்தில் அச்சிறுமிக்குப் பின்னால் இன்னுமொரு உருவம் இருப்பது
அவதானிக்கப்பட்டது.
அந்த உருவம் புயலில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகன்தான் என நிக்கொலஸின்
தந்தை ஸ்கொட் மெக்காபே அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய மகன் ஆவியாக இன்னும் தங்களோடு வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிக்கொலஸ் மெக்காபே
ஸ்கொட் மெக்காபே
"மகன் எங்களோடு இருப்பதை என்னால் உணர முடிகிறது. இதனை நான் பாதுகாப்பாக
உணர்கிறேன். எனக்கு மனநோய் இருப்பதாக பலர் கூறலாம். ஆனால் இந்தப்
புகைப்படம் உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது" என அவர் மேலும்
விபரித்துள்ளார்.
நிக்கொலஸ் ஆவியாக வலம் வருவதாக அறிந்த அவருடைய நண்பர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் இதனால் அவர்களுக்கு உள ரீதியான மருத்துவம்
வழங்கப்பட வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.



0 Comments