Subscribe Us

புத்தளம் பெரிய பள்ளி



கவிஞர் ‘உப்பூர் பூங்கோ’ ,‘தாஜுல் அதீப்’ (இலக்கிய வேந்தர்) கலாபூஷணம் மர்ஹும் அல்ஹாஜ் எ.என்.எம். சஜஹா’ன் அவர்களால் 1999 ல்;எழுதிப் பிரசுரிக்கப்பட்ட( முஸ்லிம் சமய விவகார திணைக்களம்) கவிதையின் இறுதிப்பகுதி 


சின்னமாய் புத்தளத்தின்

சிகரமாய்க் கலையழகின் 
வண்ணமாய் கட்டிடத்தின்
வகையினுக்கெடுத்துக் காட்டாய்
முன்னாண்டு முப்பத்தெட்டில் 
முழு நிலவாயுதித்ததுவே 
நன்னயம் புகழும் அல்லாஹ்
நாயனின் பெரிய பள்ளி 

வாவிக் கரைதனிலே
வானலாவி நிமிர்திலங்கும்
கூவியே தினமமைந்து 
குறித்திடும் அதான் ஓசை 
தாவியே நகரமெங்கும் 
தரும் இன்ப நாதமதை 
தாவிடும் அருள் விளங்கும்
துணையவன் பெரிய பள்ளி 

இறைவனின் அருளாம் வாரி 
இறங்குகின்ற புனிதத் தளம் 
பிறைக் கொழுந்தின் பிரதிவிம்பம் 
பிசகிலா உச்சி காணும் 
துறை புத்தளத்தினுயிர் 
துடிப்பினைக் காத்து நிற்கும் 
குறையிலா முஹையத்தீன் பேர் 
குறித்து நிற்கும் பெரிய பள்ளி

வரலாற்றுச் சுகந்தம் வீசும்
வளங்கொண்ட வன்னியர்கள்
உரம் மிகுந்த குலத்தின் செல்வி
உத்தமியார் மீரா உம்மா
சிரம் பணியும் தளத்திற்காக
சிறப்பான கொடையாய் நல்க
வரம் மிகுந்த நிலத்தில் பூத்த
வல்லோனின் பெரிய பள்ளி

ஞான குரு முஹையத்தீன் 
ஞாலம் உதித்த திங்கள்
ஆன “றபிஉல் ஆகிர்’
அருளொழுகும் பண்ணிரெண்டில்
தான தர்மம் ஈந்திடற்கு
தாங்கும் கொடி கூடு
‘தீனவர்க்கு’ அன்று பெருந்
திரு நாளைத் தந்த பள்ளி

(Faizur Rahuman)

Post a Comment

0 Comments