Subscribe Us

இலங்கையர்களுக்கு நவீன அடையாள அட்டை தயாரிப்புத் திட்டத்தை பாகிஸ்தான் நிறுவனம் வென்றது

இலங்கையர்களுக்கான நவீன தேசிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் திட்டத்தின் உரிமையைபாகிஸ்தானிலுள்ள தேசிய தரவுத்தள பதிவு அதிகார சபை (NADRA) வென்றுள்ளது.
 
இந்த அடையாள  அட்டை தயாரிப்புக்கான உரிமையைப் பெறுவதற்கு உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால், பாகிஸ்தான் நிறுவனமான (NADRA) இந்த உரிமையை வென்றுள்ளது.

 அடையாள அட்டையைப் பெறுவதற்கு தகுதியான இலங்கையின் அனைத்துப் பிரஜைகளினதும் பயோமெட்ரிக், பயோகிறபிக் தகவல்களை திரட்டுதல் அவற்றை டிஜிட்டல் மயப்படுத்தி தேசிய ஆட்கள் பதிவகமொன்றுக்கு மாற்றுவதை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

இப்பாரிய திட்டத்திற்கான உரிமையை பாகிஸ்தானின் தேசிய தரவுத்தள பதிவு அதிகார சபை (NADRA) வென்றமைக்காக அந்த அதிகார சபைக்கு பாகிஸ்தான் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு விவகார அமைச்சர் சௌத்ரி நிஸார் அலி கான் பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை NADRA பெருமைப்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments