Subscribe Us

துப்புரவு பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நிறைந்த குப்பைகளை அள்ளும் சவுதி 'சிட்டிசன்ஸ்'

(KV நிருபர்)

நிதாக்கத் புதிய தொழிலாளர் கொள்கையினைத் தொடர்ந்து பல வெளி நாட்டினர் பணி நிறுத்தம் செய்துள்ளதால் சாலைகளைச் சுத்தம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

சவூதியின் பல்வேறு பகுதிகள் குப்பை கூளங்களாக  காட்சியளிக்கின்றன. அதில் குறிப்பாக, முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் ஒரு துப்புரவு நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோருக்குக் குடியுரிமை அட்டை (இக்காமா) புதுப்பிக்கப்படாததால், குடியுரிமை புதுப்பிக்கப்படாதவர்கள் அனைவரும்(வங்கதேசத்தினர் அதிகம்) பணிக்கு வரவில்லை. இதனால் அங்குள்ள சாலைகளில் சுமார் நான்கு நாட்களாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இவற்றைக் கண்ட சவூதி இளைஞர்கள் சிலர் தாமாகவே களத்தில் இறங்கி குப்பைகளை அள்ளி சுத்தம்செய்தனர்.

Post a Comment

0 Comments