இலங்கைக் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்றுநர் கிரஹம் போர்ட்டின் பதவிக்காலம்முடிந்தவுடன் 2014 ஆம்ஆண்டு நடைபெறவுள்ள இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கும் 2015 ஒருநாள் சர்வதேச உலகக்கிண்ணப் போட்டிகளுக்கும் இடையிலான காலப்பகுதியில் இடைக்கால பயிற்றுநர் ஒருவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியின் உதவிப் பயிற்றுநரான மார்வன் அத்தபத்து, அல்லது மார்க் டேவிஸ் போன்றோர் இப்பதவிக்கான தெரிவுகளில் முன்னிலையில் உள்ளனர்.
மார்வன் அத்தபத்து புதிய பயிற்றுநராக செயற்படத் தகுதியானவர் என
பயிற்றுநரை தெரிவுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கருதுகிறது.
பயிற்றுநரை தெரிவுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கருதுகிறது.
எனினும், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, திலகரட்ன தில்ஷான் போன்ற வீரர்களை முழுமையாக கட்டுப்படுத்துவதில் மார்வன் அத்தபத்து சிரமங்களை எதிர்நோக்கலாம் எனக் கருதப்படுவதால் 2015 உலகக்கிண்ணப் போட்டிகள் முடியும் வரை இடைக்கால பயிற்றுநர் ஒருவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமிக்கக்ககூடும் என 'கிரிக்இன்போ' தெரிவித்துள்ளது.
இடைக்கால பயிற்றுநர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவர் இங்கிலாந்து, நியூஸிலாந்து சுற்றுலாக்களின்போதும் உலகக்கிண்ணத் தொடரிலும் பயிற்றுநராக செயற்படுவார்.
ஆனால், பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் இடைக்கால பயிற்றுநர்
நியமிக்கப்படாவிட்டால் ஆசிய கிண்ணம், மற்றும் இருபது20 உலகக்கிண்ணப்
போட்டிகளுக்கு மார்வன் அத்தபத்து பயிற்றுநராக செயற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறை வேற்றுக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.நியமிக்கப்படாவிட்டால் ஆசிய கிண்ணம், மற்றும் இருபது20 உலகக்கிண்ணப்
போட்டிகளுக்கு மார்வன் அத்தபத்து பயிற்றுநராக செயற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments