Subscribe Us

உலகின் ஆளுமை மிக்க 500. முஸ்லிம்கள் பட்டியலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

உலகின் ஆளுமை மிக்க / பிரபல்யமான 500 முஸ்லிம்கள் 2013/14 க்கான பட்டியலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இடம்பிடித்துள்ளார்.
3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இன,மத பாகுபாடின்றி சேவை புரிந்ததற்காகவும் அவரது கடமையுணர்வையும் அங்கீகரிக்கும் விதமாகவுமே அவருக்கு இக்கெளரவம் வழங்கப்படுவதாக முஸ்லிம்500 அமைப்பு தெரிவித்துள்ளது.
திருமதி ஜெஸீமா இஸ்மாயீல், உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மார்சூப், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தியைத் தொடர்ந்து இப்பட்டியலில் இடம்பெறும் நான்காவது இலங்கையர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகும்.
பட்டியலில் முதல் இடத்தில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக பிரதான முப்தி கலாநிதி ஷெய்க் அஹ்மத் முஹம்மத் அல் தையிபும் (67), சவுதி மன்னர் அப்துல்லாஹ் பின் அசீசும் (90), மூன்றாவது இடத்தில் ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் காமெனியும் (74) இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments