1778 :  பிரிட்­டனின் கப்டன் ஜேம்ஸ் குக், ஹவாயன் தீவு­களில் அமைந்­துள்ள
 
மாவுய் தீவில் இறங்­கிய முதல் ஐரோப்­பி­யனார்

1842 : நோட்ரெ டேம் பல்­க­லைக்­க­ழகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.
 
1922 : எகிப்­திய மன்னன் துட்­டன்­காமுன் என்­ப­வரின் கல்­ல­றைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்­னாவன் பிரபு ஆகியோர் சென்­றனர். 3000 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனி­தர்கள் இவர்­களே.
 
1941 : பிரான்­ஸி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக லெபனான் ஒரு­தலைப்
பட்­ச­மாக  பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.
 
1941 : இரண்டாம் உலகப் போர்: ஆறு ஜப்­பா­னிய விமா­னங்கள் தொலைத்­தொ­டர்­புகள் அற்ற நிலையில்  அமெ­ரிக்­காவின் பேர்ள் துறை­மு­கத்தை தாக்­கி­ய­ழிக்கப் புறப்­பட்­டன.
 
1942 : நோர்­வேயைச் சேர்ந்த 572 யூதர்கள் ஜேர்­ம­னி­யர்­க­ளினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள முகா­முக்கு நாடு­க­டத்­தப்­பட்­டனர். இவர்­களில் 25 பேரே தப்­பினர்.
 
1949 : இந்­தி­யாவின் அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் நடை­மு­றைக்கு வந்­தது.
 
1950 : மக்கள் சீனக் குடி­ய­ரசின் படைகள் வட கொரி­யா­வினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெ­ரிக்கப் படைகள் மீது பெரும் தாக்­கு­தலைத் தொடுத்­தன.
 
1957 : சாதியைப் பாது­காக்கும் இந்­திய அர­சியல் சட்டப் பிரி­வு­களைத் தீயிடும்
போராட்­டத்தை தந்தை பெரியார் ஆரம்­பித்து வைத்தார்.
 
1965 : சகாரா பாலை­வ­னத்தில் ஆஸ்­டெரிக்ஸ்-1 என்ற தனது முத­லா­வது செய்­ம­தியை பிரான்ஸ் விண்­ணுக்கு அனுப்­பி­யது.
 
1983 : லண்டன் ஹீத்ரோ விமா­ன ­நி­லைய பொதிகள் பாது­காப்பு அறையில் இருந்து 26 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான 6,800 தங்கப் பாளங்கள் கள­வா­டப்­பட்­டன.
 
2001 : நேபா­ளத்தில் மன்னர் கய­னேந்­திரா அவ­ச­ர­காலச் சட்­டத்தை பிறப்­பித்தார்.
 
2002 :  இந்­தி­யாவின் நாகா­லாந்து மாநி­லத்தில் தனி­நாடு கோரும் அமைப்­புக்­களின் மீதான தடை நீக்­கப்­பட்­டது.
 
2008: இந்­தி­யாவின் மும்பை நகரில் தீவி­ர­வா­தி­களின் தாக்­குதல் இடம்­பெற்­றது.
26/11 என குறிப்­பி­டப்­படும் இத்­தாக்­குதல்களில் 10 தீவிரவாதிகள் உட்பட 166 பேர்
உயிரிழந்தனர்.
 
2011: பாகிஸ்தானில், பாகிஸ்தான் படையினரின் சோதனைச் சாவடியொன்று நேட்டோ படைகளின் தாக்குதலுக்குள்ளானது.