Subscribe Us

அங்கோலாவில் இஸ்லாத்துக்கு தடை; பள்ளிவாசல்களை மூட, இடிக்க உத்தரவு


ஆபிரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாம் மதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை மூடுவதற்கும் இடிப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
உலக நாடுகளிலேயே முதல் முறையாக இஸ்லாத்துக்கு தடை விதித்த நாடு அங்கோலாவாகும். இது தொடர்பாக அங்கோலா நாட்டின் கலாசார துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், 'நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சு இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக' அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸே ஈடுர்டோ, 'இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது' என்றார்.

Post a Comment

0 Comments