வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி என்ற தனி நபருக்கு நாளாந்த செலவாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது அநீதியானது. இதை எதிர்த்து ஜே.வி.பி நாளை திங்கட்கிழமை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதென ஜே.வி.பி யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் நேற்று தெரிவித்தார்.
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஜனாதிபதி என்ற தனி நபருக்கு இரண்டரை கோடி ரூபா ஒதுக்கியிருப்பது அநீதியானது. நாளை பொரளையிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகி மருதானை வழியாக ஹைட்பார்க் மைதானத்தில் வந்தடையும் எனவும் தெரிவித்தார்.


0 Comments