பங்களாதேஷில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 167 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பங்களாதேஷில் 2009 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. கீழ்ப்படிய மறுத்து புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் நடத்திய தாக்குதலில் 57 இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 74 பேர் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக ஆயிரக்கணக்கான வீரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் டாக்காவில் உள்ள 3-ஆவது கூடுதல் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, கிளர்ச்சி செய்த வீரர்களில் 167 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதவிர 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை பெற்றவர்களில் பிரதா எதிர்க்கட்சியான பி.என்.பி. கட்சியின் முன்னாள் எம்.பி. நசிருதின் அஹமது பின்டு, அவாமி லீக் தலைவரும் முன்னாள் படைவீரருமான டோரப் அலி ஆகியோரும் உள்ளடங்குவர்.
242 பேர் நிரபராதிகளாகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் bசாட்டப்பட்ட 846 பேரில் 26 பேர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments