Subscribe Us

வரலாற்றில் இன்று நவம்பர் 11

1500 : பிரான்ஸின் பன்­னி­ரண்டாம் லூயி மன்­ன­னுக்கும் அரா­கனின் இரண்டாம்


1673 : உக்­ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து, லித்­து­வே­னியாப் படைகள் ஒட்­டோமான் இரா­ணு­வத்தைத் தோற்­க­டித்­தன.


1675 : குரு கோவிந்த் சிங் சீக்­கி­யர்­களின் 10 ஆவது குரு­வானார்.


1778 : மத்­திய நியூயோர்க்கில் செனெக்கா இந்­தி­யர்கள் 40 பேரைக் கொன்­றனர்.


1831 : அடிமைப் புரட்­சியில் ஈடு­பட்­ட­மைக்­காக கைது செய்­யப்­பட்ட நாட் டர்னர்
வேர்­ஜீ­னி­யாவில் தூக்­கி­லி­டப்­பட்டான்.


1865 : டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகு­தி­களை பூட்டான் பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்குக்  கொடுத்­தது.


1880 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் Bushranger நெட் கெல்லி மெல்­பேர்னில்
தூக்­கி­லி­டப்­பட்டான்.


1887 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சிக்­காகோ நகரில் தொழி­லாளர் தலை­வர்கள் ஓகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.


1889 : வாஷிங்டன் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 42 ஆவது மாநி­ல­மாக இணைக்­கப்­பட்­டது.


1909 : ஹவாயில் பேர்ள் துறை­மு­கத்தில் அமெ­ரிக்கக் கடற்­படைத் தளம் அமைக்­கப்­பட்­டது.


1918 : பிரான்ஸில் “கொம்­பியேன் காடு" என்ற இடத்தில் ரயில் பெட்டி ஒன்றில்
ஜேர்­ம­னிக்கும் கூட்டுப் படை­க­ளுக்கும் இடையில் போர்­நி­றுத்த ஒப்­பந்தம்
கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடி­வுக்கு வந்­தது.


1918 : ஜோசப் பித்­சூத்ஸ்கி வோர்­சா­வுக்குத் திரும்பி போலந்தின் உயர் இரா­ணுவப்பத­வியைப் பெற்றார். போலந்து சுதந்­திரம் பெற்­றது.


1919 : இலங்கைத் தேசிய காங்­கிரஸ் அமைக்­கப்­பட்­டது.


1930 : அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்­டு­பி­டிப்­பான ஐன்ஸ்டைன் குளிர்­சா­தனப் பெட்­டிக்­கான காப்­பு­ரி­மத்தைப் பெற்­றனர்.


1933 : யாழ். பொது நூல் நிலையம் அமைக்­கப்­பட்­டது.


1940 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்­பா­ராத சூறா­வ­ளி­யினால் 144 பேர் இறந்­தனர்.


1942 : இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்­மனி பிரான்ஸ் மீதான தனது முற்­று­கையை முடித்­தது.


1960 : தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இரா­ணுவப் புரட்சி தோல்­வியில் முடிந்­தது.



1965 : ரொடீ­சி­யாவில் (தற்­போ­தைய ஸிம்ப்­பாப்வே) இயன் ஸ்மித் தலை­மை­யி­லான வெள்ளை இன சிறு­பான்மை அரசு சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.


1966 : நாசா ஜெமினி 12 கப்­பலை விண்­ணுக்கு அனுப்­பி­யது.


1968 : மாலை­தீ­வு­களில் இரண்­டா­வது குடி­ய­ரசு அறி­விக்­கப்­பட்­டது.


1975: அங்­கோலா சுதந்­திரம் பெற்­றது.


1981: அன்­டி­குவா, பார்­புடா ஆகி­யன ஐநாவில் இணைந்­தன


2000: ஆஸ்­தி­ரி­யாவில் கேபிள் காரொன்று தீப்­பற்­றி­யதால் 155 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1992 : இங்­கி­லாந்து திருச்­சபை பெண்­க­ளையும் சம­ய­கு­ருக்­க­ளாக சேர்ப்­ப­தற்கு
முடிவெடுத்தது.


2004 : யஸீர் அரபாத் இறந்து விட்டதாக பலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.


2008: “குயின் எலிஸபெத் 2” உல்லாசக் கப்பல் டுபாயிலிந்து அதன் முதல் பயணத்தை ஆரம்பித்தது.
பேர்­டினண்ட் மன்­ன­னுக்கும் இடையில் நேபிள்ஸ் பேர­ரசைத் தமக்­கி­டையே பிரிக்க உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

Post a Comment

0 Comments