1632 : முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டார்;.
1844 : டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.
1860 :ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார்.
1861 : அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, அமெரிக்க மாநிலங்களின்
கூட்டமைப்புக்கு ஜெபர்சன் டேவிஸ தலைவரானார்.
1891 : இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் “லேடி ஹவ்லொக்" முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

1913 : தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
1918 : போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.
1935 : எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.
1941 : இரண்டாம் உலகப் போரின்போது, சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜேர்மனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
1943 : இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கொல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.
1943 : இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய படையினர் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். ஜேர்மனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.
1944 : புளுட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு இது பயன்பட்டது.
1944 : புளுட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு இது பயன்பட்டது.
1962 : ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
1963 : வியட்நாம் போர்: நவம்பர் முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் அதிபரானார்.
1965 : ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை
விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
1977 : ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
1985 : கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.
1991: வளைகுடா யுத்தத்தின்போது இறுதியாக எரிந்துகொண்டிருந்த எண்ணெய் வயலின் தீ அணைக்கப்பட்டது.
1999 - அவுஸ்திரேலியர்கள் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருப்பதற்கு, சம்மதம் தெரிவித்தனர்.
2004 இங்கிலாந்தில் இடம்பெற்ற கடுகதி ரயிலொன்று காரொன்றுடன் மோதியதால் 7 பேர்டிபலியானதுடன் 150 பேர் காயமடைந்தனர்.

0 Comments