அஸ்ஸலாமு அலைக்கும்,Kalpitiya Voice இணையதளத்துடன் இணைந்துள்ளீர்கள் என்பதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்,அவ்வப்போது எமது KVயின் புதிய முயற்சிகள் சம்பந்தமாக உங்க
ளுக்கு FB,Twitter,Email மூலமாக தரவேற்றம் செய்யப்படும், இதில் உங்களுக்கும் உங்களின் நணபர்களுக்கும்,உறவினர்களுக்கும் பல பயன்தரக்கூடிய விடயங்களும் உள்ளக்கப்பட்டுள்ளன.
உலகில் பல ஆயிரக்கணக்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும். அவை ஒரு போதும் எம்மை வந்து சேர்வதில்லை நாம் தான் வாய்ப்புக்களையும் , சந்தர்ப்பங்களையும் தேடி செல்ல வேண்டும்.
நவீன உலகில் ஊடகத்துறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். உலகி்ல் எந்த ஒரு மூலையிலும் இடம்பெரும் சம்பவங்களை உடனுக்குடன் கண்டங்கள் தாண்டி அவ்வினாடியே காட்சிப்படுத்தும் சாதனங்களாக இணையம் மாறி இருக்கிறது. எனினும் இணைய மற்றும் ஊடகத்துறையில் கற்பிட்டி மக்கள் வகிபாகம் பல தசாப்தங்களாக கேள்விக்குறியாக இருந்த போதிலும் அன்மையில் சில முாநுால் இணையதளங்களில் உருவாக்கப்பட்டு குறிப்பிடதக்க அளவு ஆரோக்கியமான பணிகளை மேற்கொண்டு வருவதும் பாராட்டதக்கது. குறிப்பாக KALPITIYA VOICE இணையதளம் இனிவரும் காலங்களில் கற்பிட்டியின் செய்திகளை உள்வாங்கி அவைகளை வெளியிட்டு அதற்கான தீர்வுகளை தகுந்த அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தி தக்க தீர்வுகளை பெற்றுக்கொடுக்க உள்ளது. இயக்க மோதல்கள், கட்சி விமர்சனங்கள் போன்றவற்றை தவிர்த்து கற்பிட்டி வாழ் மக்களை விழிப்புனர்வுட்டும் செய்தகளையும் காலத்துக்கு தகுந்த கவர்சிகரமான செய்தினளையும் , சிந்தனைகளையும் சுமந்த ஒரு இணையதளமாக KALPITIYA VOICE இணையதளம் காணப்படும்.
குறிப்பாக கற்பிட்டி வாழ் மக்களின் முரண்பாடுகளை தணிக்கும் ஆக்கங்கள் அதிகமாக பிரசுரித்து சமூக ஒற்றுமைக்காக சிறப்புக்குரல் கொடுக்கும் இணையதளமாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. நியாயமான கோரிக்கைகளுக்கு இயக்க,கட்சி வேறுபாடு பாராமல் களம் அமைத்து கொடுக்கும் இத்தளம். இணைய உலகில் இத்தளத்தின் பிரவேசம் தாமதமாக இருந்தாலும் குறுகிய காலப்பகுதியில் துாரத்தை எட்டிப்பிடிக்கும் என்பதிலும் ஐயமில்லை.
அன்மையில் கற்பிட்டி மக்களுக்கு கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளை கருத்திற் கொண்டும், இளைஞர்கள் , யுவதிகள். கல்வித்திறன் , ஊக்கத்திறன் வளர்ப்பு , போன்ற எண்ணக்கருத்துக்்களையும் இத்தளம் அடிப்படையாக கொண்டுள்ளது. மயக்கத்தில் இருந்த கற்பிட்டி வாழ்மக்களை தட்டி எழுப்பவும் அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க இந்த KV வழிவகுக்கும். பக்கசார்பில்லாமல் சமூக நலனை முதன்மைபடுத்தி , உண்மையாகவும் , தெளிவாகவும் , துணிவாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு மகத்தான இணைதளமாக அமைந்துள்ளது.
செய்திகளில் நம்பகத்தன்மை , செய்தகளை எழுத்து வடிவில் சுருக்காது , படங்களுடன் சுடச் சுட வெளியிடல் , தனித்துவம் மற்றும் ஊடகவியல் போன் உயர்பண்புகளை KV பேனும். குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் எம் கற்பிட்டி வாழ் மக்கள் எமது ஊரின்செய்திகளை அறிய ஆவலாய் இருப்பதால் அதையும் மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த KV.
இனிமேல் கற்பிட்டி மக்கள் தங்கள் ஊரின் செய்திகளை அறிய உடனுக்குடன் எமது இணையதளத்தை நாடுவார்கள் என்றால் அது மிகையாகாது. இதன் மகத்தான பணியை தொடர நாம் முதற்கனமாக உங்களை நாடி உள்ளோம் . நீங்கள் செய்ய வேண்டியது கற்பிட்டி செயலகத்துக்கு உற்பட்டி அனைத்து இளைஞர்களுக்கும்,பெரியார்களுக்கும் இதை அறிவித்து பாடசாலைகள், வைத்தியசாலை, சமூக சேவைகள், பள்ளி நிர்வாக செயல்கள், பிரதேச சபை , காவற்துறை, ஜனாஸா, ஊர்செய்திகள், விளையாட்டு, முதலியவற்றின் நிகழ்வுகளை தகுந்த ஆதாரங்கள் , புகைப்படங்கள் என்பனவற்றுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.
செய்திகளையும் , ஆக்கங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி : kv.humanresource@gmail.com
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இச்செய்தியை பரவுங்கள்.
இப்படிக்கு
KV பிரதம செய்தி ஆசிரியர்.
www.kalpitiyavoice.com
Skype :Kalpitiya Voice
Twitter : Kalpitiya Voice
Facebook : Kalpitiya Voice

0 Comments