Subscribe Us

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பஸ் தீக்கிரை

-ஜுட் சமந்த(TM)

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது வெள்ளவத்தையிலிருந்து சென்ற அதிசொகுசு தனியார் பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே கலஹிடியாவ 67 ஆம் வளைவில் வைத்தே குறித்த பஸ்  நேற்று சனிக்கிழமை இரவு தீக்கிரையாகியுள்ளது.

தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் 25 பயணிகள் வரையில் இருந்துள்ள போதிலும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




Post a Comment

0 Comments