Subscribe Us

கற்பிட்டியின் பிரதேச சபைக்கு கற்பிட்டி உரிமையாளனின் மடல்.(படங்கள் இணைப்பு)

எமது பொன்னான கற்பிட்டியில் காலம் காலமாக உள்ள இப்பிரச்சினைக்கு எப்போதுதான் விடிவு காலம்?

இலக்ஸன் வாந்தால் மட்டும் வீடு வீடாக சென்று பிரச்சினைகளை அறிந்து சிறு சிறு வேளைத்திட்டங்களை செய்வார்கள் இலக்ஸன் முடிந்துவுடன் நீ யார் உனக்காக நான் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்கிரார்கள் என்னடா நியாயம் இது.

டெங்கு வருகிரதாம் வீடு துப்பரவு இல்லை என்று இல்லாதவனிடம் சென்று பனம் பறிக்கும் ஒரு கூட்டம். அவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன் வீட்டில் மட்டுமா நுளம்பு , உங்கள் கல்லம் கபடம் இல்லாத நெஞ்சில் இல்லையா டெங்கு பாருங்கள் !இந்த பாதையை இதனால் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு அசௌகரிம் இதே உங்கள் வீட்டு பாதயாக இருந்தால் உடனே சீர்திருத்தம் செய்வீர்கள் .

மக்களே பயப்பட வேண்டாம் ! நீங்கள் தானே சொன்னீர்கள் உங்களது பிரதேச சபை மந்திரித்துமா மார்கள்! Road போட்டு தந்தார் Street light போட்டு தந்தார் என்று . பாருங்கள் இந்த பாதையை Road Light இரண்டும் இருக்கா என்று சற்று சிந்தியுங்கள் ......

பிரதேசத்தை ஆளுபவன் யாரோ? அது சரி எப்படி பார்த்தாலும் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை தானே!

FREE ya எத குடுத்தாலும் வாங்குவது எம் மக்கள்!

எத்தனை மூதாட்டிகள், எத்தனை பெரியார்கள் , எத்தனை இளைஞர்கள் இருந்தும் என்ன பயன் !

எவனாவது நல்லது செஞ்சா உடனே அவன் தவ்ஹீத் ஜமாத் காரன் , இல்லாவிடில் ஜமாத்துல் முஸ்லீமீன் என்று ஜமாத் பேரை கிளப்பி விடுவது.

எல்லோருக்கும் பதவி ஆசை நிருத்துங்கள் பதவி ஆசையை இனையுங்கள் கைகோருங்கள் ஒன்றாய் செயல்படுங்கள்.

பெரிய பள்ளி என்று ஒன்று இருக்கிறது ஊருக்கு. சென்று ஊர் பிரச்சினைகளை கதையுங்கள் தீர்வை காணுங்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்

ஆனா ஒன்னுங்க! கல்பிட்டி மக்கள் சன்டைகளில் ஒற்றுமை இருக்கோ! இல்லையோ! சாப்பாட்டு விசயத்துல மட்டும் பயங்கர ஒற்றுமை!

இன்னும் எத்தனை நாளைக்கு கற்பிட்டி நாட்டான் என்று பெயர் வாங்கப்போறீர்கள் திருந்துங்கள்.

இப்படிக்கு
என்றும் நன்றி உள்ள
கற்பிட்டி உரிமையாளன்



Post a Comment

0 Comments