பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபெலிசிஸ் பந்தை சேதப்படுத்தியது டெலிவிசன் ரீ பிளேயில் தெரிந்தது.
இதை தொடர்ந்து தென்ஆப்பிரிக்க அணிக்கு விதிப்படி 5 ரன் அபராதமாக நடுவர்கள் விதித்தனர். அந்த 5 ரன் பாகிஸ்தானுக்கு போனசாக வழங்கப்பட்டது.ஆனால் நாங்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும், நாங்கள் ஏமாற்றவில்லை என்றும் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கு அவர் கேப்டனாக உள்ளார்.