கல்பிட்டி
பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தில் நடந்தேறியுள்ள 50 லட்சம் மோசடியினைத்
தொடர்ந்து இன்று 2013.10.29ம் திகதி எல்லாக் கிழைகளும், வர்த்தக
நிலையங்களும் மற்றும் பிரதான காரியாலயமும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இது தொடர்பாக அறியப்பட்டதாவது..........இரண்டு கிளைச்சங்க அதிகாரிகள் பெருந்தொகையான பணத்தை நிதி மோசடி செய்த நிலையில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதையிட்டு, அது தொடர்பான தகவல்களை பெறும் முகமாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாஷிரீ ஜயசேக்கர அவர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடுநிலைப் பணிப்பாளர் முகைதீன் அவர்களின் தலைமையில் எல்லா அதிகாரிகளும் குருணாகல் சென்றதன் காரணமாகவே சங்கம் மூடப்பட்டதாக தெரிய வருகிறது.
மேலும் இரண்டு முக்கிய கிளை அதிகாரிகள் மோசடிசெய்து வெளிநாடு சென்றமைக்கு ஆளும் பணிப்பாளர் சபைதான் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது. முதலப்பாலியிலிருந்து வரும் பணிப்பாளர் ஒருவரும், முஸல்பிட்டியிலிருந்து வரும் பணிப்பாளர் ஒருவரும் மேற்படி அதிகாரிகளிடமிருந்து தலா 5 லட்சத்திற்கும் அதிகமான எரிபொருட்களும், பணமும் பெற்றுள்ளதாக, தப்பிச் சென்ற அதிகாரிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றவர்களுள் முஸல்பிட்டியிலிருந்து வரும் பணிப்பாளர் ஒருவரும் குறிஞ்சிப்பிட்டி முன்னால் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரும் மற்றும் சின்னக்குடியிருப்பு கிளைச்சங்கத்தின் அதிகாரியும் அடங்குவதாகவும் நம்பத்தகுந்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்து வருகிறது. இந்த விடயங்கள் தொடர்பாக நான் சிலாபம் பிரதி ஆனையாளர் காரியாலய அதிகாரி சுமனவீர அவர்களை நேரில் சந்தித்து கேட்டறிந்த போது.....
இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு மாகாண சபை அமைச்சர் சனத் நிஸாந்த அவர்கள் கொண்டு சென்றுள்ளதாகவும், நாளை மறு நாள் இதுதொடர்பான தீர்மானக் கடிதம் வந்தவுடன் ஏனைய விடயங்களை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போதைய பணிப்பாள் சபைக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட அல்லது அதிகாரங்ளை முடக்க வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.

0 Comments