Subscribe Us

கலேவலைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத நுளம்பு.

(ஜே.எம்.ஹபீஸ்)
கலேவலைப் பிரதேசத்தில் ஒரு இராட்சத நுளம்பு ஒன்றைக் கண்டு பிடித்ததாக பொதுமகன் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.

கலேவல மொரகொல்லாகம என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சாந்த பண்டார என்பவரது வீட்டிலே சுமார்  நான்கு அங்குலம் நீளமான நுளம்பு ஒன்றைக் கண்டு தாம் அதைப் பிடித்து பாதுகாப்பபாக வைத்துள்ளதாக கலேவலை சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்துள்ளார். அத்துடன் மேற்படி
நுளம்பு டெங்கு நோய் பரப்பும் நுளம்பின் வடிவத்தை உடைய தாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கலேவலை பொது சுகாதாரப் பரிசோதகர் ராஜா நவரத்ன இது பற்றித்தெரிவிக்கையில் அளவில் பெரிய உடம்பைக் கொண்ட நுளம்புகள் நோய்க் காவியாகத் தொழிற்பட்டமைபற்றி இது வரை எங்கும் பதிவாக இல்லை என்றும், இது பற்றி தாம் அவ்வளவு பெரிதாக
எடுத்துக் கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments