தொழிலதிபர்கள்
மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ‘போர்ப்ஸ்’
பத்திரிகை ஆண்டு தோறும் பட்டியலிட்டு வருகிறது.
இப்பத்திரிகையின் இந்த (2013) ஆண்டு பட்டியலின் படி உலகின் சக்தி
வாய்ந்த 3வது பெண்மணியாக காங்கிரஸ் கட்சி மற்றும் ஆளும் ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் சோனியா காந்தி (66) தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.நடைமுறையில் இந்தியாவின் தலைமை என்று சோனியா காந்தியை விவரித்துள்ள போர்ப்ஸ், உலகின் சக்தி மிக்க பெண்களில் 3வது இடத்தையும், உலகின் சக்தி மிக்க 72 தலைவர்களின் பட்டியலில் 21 இடத்தையும் அவருக்கு அளித்துள்ளது.
சென்ற (2012) ஆண்டு உலகின் சக்தி மிக்க தலைவர்களில் முதல் இடம் வகித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
முதல் இடத்தை தற்போது ரஷ்ய அதிபர் புதின் கைப்பற்றியுள்ளார்.
இந்த ஆண்டின் டாப் 10 பட்டியல்:-
1. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,
2. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,
3. சீன கம்யூனிஸ்ட் தலைவர் க்சி ஜின்பிங்,
4. கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்,
5. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்,
6. மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ்,
7. அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் பென் எஸ்.பெர்னகே,
8. சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்,
9. ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ டிராகி,
10. வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக்கேல் டியூக்.
முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியாத இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 11வது இடத்தில் நிற்கிறார்.
முதல் 100 வரிசையில் இடம் பெற்ற இதர இந்தியர்களாக பிரதமர் மன்மோகன் சிங் (28), முகேஷ் அம்பானி (38) தொழிலதிபர்கள் லட்சுமி மிட்டல் (51) ஆகியோர் உள்ளனர்.


0 Comments