Subscribe Us

கட்டுநாயக்க அதிவேக பாதையில் கட்டாக்காலி நாய்கள் தொல்லை!

கட்டுநாயக்க அதிவேக பாதைச் சுற்றாடலில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை மிக அதிகமாக காணப்படுகின்றது என அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன. ஆயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இப்பாதையை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தபோதுஒரு நாய்கூட அங்கு காணப்பட்டு இருக்கவில்லை. ஏனென்றால் திறப்பு விழாவுக்கு முந்திய நாள் சில பல உத்திகளை கையாண்டு வீதி  அபிவிருத்தி அதிகார சபை இந்நாய்களை அப்புறப்படுத்தி இருந்தது. இங்கு காணப்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கருத் தடைசித்திர சிகிச்சை இவற்றுக்கு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திறப்பு விழாவுக்கு பின்னர் தற்போது இச்சூழலில் நாய்களை காண முடிகின்றதுஎன்பதுடன் இந்நாய்கள் வாகனப் போக்குவரத்துக்கு பேரிடைஞ்சல்களாக உள்ளதை அவதானிக்கமுடிந்தும் உள்ளது.




Post a Comment

0 Comments