இத்தாலியைச் சேர்ந்த
ரெஸ்டுரன்ட் உரிமையாளர் ஒருவர் 40 வருடங்களுக்கு மேலாக முயற்சித்து காட்டுக்குள்
பாரிய 'தீம்
பார்க்' ஒன்றினை
தனி ஒருவராக உருவாக்கியுள்ளார். புரூனோ என்பவரே இந்த தீம் பார்க்கினை தனி ஒருவராக 1969ஆம் ஆண்டு முதல் உருவாக்கி வருகின்றார்.மொன்டெலோ எனுமிடத்திலுள்ள இந்த தீம் பார்க்கில் கையினால் செயற்படுத்தும் ரோலர் கொஸ்டர், சறுக்கி, ஸீ ஸோ, சுழலும் ஊஞ்சல் உள்ளிட்ட பல சாதனங்கள் உள்ளன. இவற்றினை தனது சொந்த முயற்சியில் ப்ரூனோ அவரது கைகளினாலேயே வடிவமைத்துள்ளார்.எந்தவொரு அடையாளமும் இன்றிய ஒரு வனப்பகுதியில் 1969ஆம் ஆண்டளவில் ப்ரூனோவினால் அமைக்கப்பட்ட உணவகமே இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது.

ஆரம்பத்தில் தனது உணவகத்திற்காக
ப்ரூனோ இணைந்த கதிரைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார். ஆனால்
இதனை செய்வதற்கு நேரமில்லை உங்களுக்கு முடியுமானால்
வெல்டிங் செய்து அவ்வாறான கதிரைகளை உருவாக்குமாறு வெல்டர்
கூறியுள்ளார்.பின்னர் அந்த வெல்டரிடமே
வெல்டிங் கற்றுள்ளார். அதுவே ப்ரூனோ தனது தீம் பார்க் வேலைகளில் 40 வருடங்களாக ஈடுபட
காரணமாயிற்று.
இங்கு தற்போது 500 கதிரைகள் உள்ளன. ஏராளமான வடிக்கையாளர்களும் வந்து செல்கின்றனர். இத்திட்டம் இந்தளவிற்கு வெற்றிபெறும் என நான் நினைக்கவில்லை. மிக மகிழ்சியாகவுள்ளது என ப்ரூனோ தெரிவித்துள்ளார். Ai Pioppi எனப் பெயரிடப்பட்டுள்ள முன்மாதிரியான இந்த தீம் பார்க் தொடர்பில் அண்மையில் ஒரு ஆவணப்படமும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



0 Comments