Subscribe Us

வரலாற்றில் இன்று ஒக்டோபர் 28

1492 : கிறிஸ்­டோபர் கொலம்­பஸும் அவ­ரது கூட்­டத்­தி­னரும் சகாக்­களும் கியூ­பாவில் கரை இறங்­கினர்.


1627: முக­லாய பேர­ரசர் ஜஹாங்கீர் இறந்தார்.


177: அமெ­ரிக்கப் புரட்சிப் போரின்­போது பொஸ்­டனில் இருந்து பொது­மக்கள் வெளி­யே­று­வதை பிரித்­தா­னியா தடுத்­தது.


1834 : சுவான் ஆற்றுக் குடி­யேற்­றத்தில் (தற்­போ­ைதய மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில்) பழங்­கு­டி­க­ளுக்கும் ஆங்­கி­லேயக் குடி­யேற்றவாசிக­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற மோதலில் பல பழங்­கு­டி­யினர் கொல்­லப்­பட்­டனர்.


1886: - நியூ­யோர்க்கில்  அமெ­ரிக்க சுதந்­திரச் சிலையை அமெ­ரிக்க ஜனா­தி­பதி குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.


1918 :- முதலாம் உலகப் போர்: ஆஸ்­தி­ரியா, ஹங்­கே­ரி­யிடம் இருந்து செக்­கஸ்­லோ­வாக்­கியா விடு­தலை பெற்­றது.


1918: - மேற்கு கலீ­சி­யாவில் புதிய போலந்து அரசு அமைக்­கப்­பட்­டது.


1922: - முசோ­லினி தலை­மையில் இத்­தா­லிய பாசிஸ்­டுகள் ரோம் நகரை சென்­ற­டைந்து இத்­தா­லிய அரசைக் கைப்­பற்­றினர்.


1940 : - இரண்டாம் உலகப் போர்: இத்­தாலி, அல்­பே­னியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்­பற்­றி­யது.


1941: - லித்­து­வே­னி­யாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்­ம­னியர் 9,000 யூதர்­களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்­தனர்.


1942: - கனடா முதல் அலாஸ்கா வரை­யான அலாஸ்கா நெடுஞ்­சாலை அமைக்­கப்­பட்­டது.


1942: - போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறு­வர்­களும் 6,000 பெரி­ய­வர்­களும் நாசி­க­ளினால் வதை­மு­கா­முக்கு அனுப்­பப்­பட்­டனர்.


1962: - கியூ­பா­வி­லி­ருந்து சோவியத் ஏவு­க­ணை­களை அகற்­று­வ­தாக சோவியத் தலைவர் நிக்­கிட்டா குருஷேவ் அறி­வித்தார்.


1971: - ஐக்­கிய இராச்­சியம் தனது முத­லா­வது செய்­ம­தியை (புரொஸ்­பெரோ)  விண்­ணுக்கு ஏவி­யது.


1972: - முத­லா­வது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்­பட்­டது.


1985: - சண்­டி­னீஸ்­டாவின் டானியேல் ஒர்ட்­டேகா நிக்­க­ரா­கு­வாவின் ஜனா­தி­ப­தி­யானார்


1985: - மிகைல் கொர்­பச்சோவ் சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சியின் பொதுச் செய­லாளர் ஆனார்.


2006: - 1930களில் ரஷ்யக் கம்­யூ­னிஸ்­டு­களால் உக்­ரேனின் பிகீவ்­னியா காட்டில் கொலை செய்­யப்­பட்ட 817 உக்­ரே­னி­யர்­க­ளி­னது இறுதிக் கிரி­யைகள் அவர்கள் கொலை செய்­யப்­பட்ட இடத்தில் இடம்­பெற்­றன.


2006: - தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்கை அர­சுக்கும் இடையே 8 மாதங்­க­ளாகத் தடைப்­பட்­டி­ருந்த சமா­தானப் பேச்­சுக்கள் ஜெனீ­வாவில் மீண்டும் ஆரம்­ப­மா­கின.


2006: பங்­க­ளாதேஷ் அவாமி லீக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் தமது எதிர்க்­கட்சிக் கூட்­ட­மொன்றில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் 14 பேர் பலி­யா­கினர்.


2007: ஆர்ஜென்டீனாவின் முதலாவது பெண் பிரதமராக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் பதவியேற்றார்.


2009: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 117 பேர் பலியானதுடன் 213 பேர் காயமடைந்தனர்.

Post a Comment

0 Comments